கோவையில் தேர்தல் :  11 வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணி தீவிரம்

published 2 years ago

கோவையில் தேர்தல் :  11 வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணி தீவிரம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/EjTtcBnBSk61kfgvff3n15

கோவை: கோவை மாவட்டத்தில் ஒரே கட்டமாக 5 ஊராட்சி ஒன்றியங்களில் 1 கிராம ஊராட்சி தலைவர், 7 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வரும் ஜூலை 9ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் படி கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் நெம்பர்.10 முத்தூர் கிராம ஊராட்சி தலைவர், குருநெல்லிபாளையம் கிராம ஊராட்சி 4வது வார்டு உறுப்பினர், சொக்கனூர் கிராம ஊராட்சி 1 வது வார்டு உறுப்பினர், நல்லட்டிபாளையம் கிராம ஊராட்சி 4வது வார்டு உறுப்பினர், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் வாழைக்கெம்பு நாகூர் கிராம ஊராட்சி 2 வது வார்டு உறுப்பினர், பொள்ளாச்சி (தெற்கு) ஊராட்சி ஒன்றியத்தில் சிங்காநல்லூர் கிராம ஊராட்சி 2வது வார்டு உறுப்பினர், பொள்ளாச்சி (வடக்கு) வடக்கிப்பாளையம் கிராம ஊராட்சி 2 வது வார்டு உறுப்பினர், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பேரூர் செட்டிப்பாளையம் கிராம ஊராட்சி 1 வது வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியர் தலைமையில் 5 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 8 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 18ம் தேதியில் இருந்து இப்பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளன. இத்தேர்தலுக்கு 11 வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட உள்ளன. இதனிடையே தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் மாவட்ட தேர்தல் பிரிவு சார்பாக தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், "11 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடிக்கு தேவையான அடிப்படை வசதிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக வீல்சேர்கள் வைக்கப்படும். பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்" என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe